/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பயணி மண்டை உடைப்பு ஓட்டுனருக்கு காப்பு
/
பயணி மண்டை உடைப்பு ஓட்டுனருக்கு காப்பு
ADDED : ஜன 27, 2024 12:48 AM
மடிப்பாக்கம், மடிப்பாக்கம் அடுத்த நன்மங்கலம், இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன், 24; கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம், 'பைக் டாக்சி'யில் பதிவு செய்து, மடிப்பாக்கத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, ஓட்டுனருடன் வாய்த்தகராறு ஏற்பட்டதால், தாமோதரன், பாதி வழியில் இறங்கிவிட்டார்.
சிறிது நேரம் கழித்து, தாமோதரன் வேலை செய்யும் இடத்திற்கு பைக் டாக்சி ஓட்டுனரும், அவரது இரு நண்பர்களும் வந்தனர். தாமோதரனின் மண்டையில் சுத்தியலால் அடித்து, பற்களை உடைத்து, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து, தாமோதரன் புகாரின்படி வழக்கு பதிந்த மடிப்பாக்கம் போலீசார், கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த பைக் டாக்சி ஓட்டுனர் ஹபிபுல்லாவை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இரு நண்பர்களை தேடுகின்றனர்.

