/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அம்பத்துார் ரயில் நிலையம் செல்லும் பயணியருக்கு உயிர்பலி அபாயம்
/
அம்பத்துார் ரயில் நிலையம் செல்லும் பயணியருக்கு உயிர்பலி அபாயம்
அம்பத்துார் ரயில் நிலையம் செல்லும் பயணியருக்கு உயிர்பலி அபாயம்
அம்பத்துார் ரயில் நிலையம் செல்லும் பயணியருக்கு உயிர்பலி அபாயம்
ADDED : செப் 01, 2025 01:22 AM

அம்பத்துார்:அம்பத்துார் ரயில் நிலைய சுரங்கப்பாதை பணிகள், கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வருகின்றன. அதில், கே.கே.ரோடு பகுதியில், சுரங்கப்பாதைக்காக பள்ளம் தோண்டி, பக்கவாட்டுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அம்பத்துார் மற்றும் சுற்றுவட்டாரத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், மழைநீர் வெளியேற வழியில்லாமல், சுரங்கப்பாதை பணித்தளம் மழைநீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், சுரங்கப்பாதையில் தேங்குகிறது.
இதனால், ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணியர் உயிரை பணயம் வைத்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பருவமழைக்கு முன், சுரங்கப்பாதையைச் சுற்றியுள்ள பகுதிகளை சீரமைக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.