/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துப்பாக்கி சுடும் போட்டி போலீசார் அசத்தல்
/
துப்பாக்கி சுடும் போட்டி போலீசார் அசத்தல்
ADDED : செப் 30, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, துப்பாக்கி சுடும் போட்டியில், தமிழக போலீசார் 33 பதக்கங்கள் வென்று அசத்தினர்.
தமிழ்நாடு சூட்டிங் அசோசியேஷன் சார்பில், சென்னை ரைபிள் கிளப், 50வது துப்பாக்கி சுடும் போட்டி, வேளச்சேரியில் உள்ள, தனியார் கல்லுாரியில் நடந்தது.
இப்போட்டியில், தமிழக காவல் துறையைச் சேர்ந்த, அதிகாரிகள் மற்றும் போலீசார் 40 பேர் உட்பட பலர் பங்கேற்றனர். இவர்களில், நுண்ணறிவு பாதுகாப்பு பிரிவு டி.ஐ.ஜி., திருநாவுக்கரசு, 50 மீ., பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றார்.
உதவி கமாண்டன்ட் மகேஸ்வரி, 10 மீ., பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். இவர்கள் உட்பட, 33 அதிகாரிகள் மற்றும் போலீசார் பதக்கங்கள் வென்று சாதனை படைத்து உள்ளனர்.

