/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆசைகாட்டி பெண் போலீசை ஏமாற்றிய போலீஸ்காரர், ஆட்டோ ஓட்டுனர் கைது
/
ஆசைகாட்டி பெண் போலீசை ஏமாற்றிய போலீஸ்காரர், ஆட்டோ ஓட்டுனர் கைது
ஆசைகாட்டி பெண் போலீசை ஏமாற்றிய போலீஸ்காரர், ஆட்டோ ஓட்டுனர் கைது
ஆசைகாட்டி பெண் போலீசை ஏமாற்றிய போலீஸ்காரர், ஆட்டோ ஓட்டுனர் கைது
ADDED : ஜூன் 27, 2025 12:37 AM
தாம்பரம், திருமண ஆசைகாட்டி, ஆயுதப்படை பெண் போலீசை கர்ப்பமாக்கி ஏமாற்றிய, ஆயுதப்படை போலீஸ்காரரும், அவரது நண்பரான ஆட்டோ டிரைவரையும் போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த, 30 வயதான பெண் ஒருவர், சேலையூர் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி, தாம்பரம் ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு, சிட்லபாக்கம் ஏரிக்கரை தெருவை சேர்ந்த வீரமணி, 35, என்பவர் அறிமுகமாகி உள்ளார். கபடி பயிற்சியாளரான இவர், ஆவடி ஆயுதப்படையில் முதல் நிலை காவலராக உள்ளார். இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது, பெண் போலீசை தன் வீட்டிற்கு அழைத்து சென்று வீரமணி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதன்பின், திருமணம் செய்து கொள்ளாமல், நாட்களை கடத்தி வந்துள்ளார்.
இதற்கிடையே, தன் நண்பரான சிட்லபாக்கம் ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சரத்குமார், 30, என்பவரை பெண் போலீசுக்கு, வீரமணி அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
அவரும், திருமணம் செய்து கொள்வதாக கூறி, பெண் போலீசை தன் வீட்டிற்கு அழைத்து சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பெண் போலீஸ் கர்ப்பம் அடைந்த நிலையில், குழந்தை வேண்டாம் எனக்கூறி, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, கருகலைப்பு செய்ததாக கூறப்படுகிறது.
அதன்பின், திருமணம் செய்யும்படி பெண் போலீஸ் வலியுறுத்தியபோது, சரத்குமார் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது தெரியவந்தது.
வீரமணியும், சரத்குமாரும் திட்டமிட்டு தன்னை ஏமாற்றியதை அறிந்த பெண் போலீஸ், தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.
சேலையூர் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, சரத்குமாரை சில நாட்களுக்கு முன்னும், வீரமணியை நேற்று முன்தினமும் கைது செய்தனர்.
***