/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குப்பையை அகற்றி கோவில் இடத்தில் மரக்கன்று நடவு
/
குப்பையை அகற்றி கோவில் இடத்தில் மரக்கன்று நடவு
ADDED : ஜூன் 19, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார், குன்றத்துார் அடுத்த கோவூரில், பிரசித்தி பெற்ற சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. புதன் ஸ்தலமாக விளங்கக்கூடிய இக்கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவூரில் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், அப்பகுதியின்ர குப்பை கொட்டி நாசப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி, குப்பையை அகற்றி சுத்தம் செய்து, மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நுாற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு, பசுமையாக மாற்றும் திட்டத்தை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.