/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பழுதான கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் சீரமைக்க வேண்டுகோள்
/
பழுதான கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் சீரமைக்க வேண்டுகோள்
பழுதான கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் சீரமைக்க வேண்டுகோள்
பழுதான கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் சீரமைக்க வேண்டுகோள்
ADDED : ஜன 27, 2024 12:53 AM

வில்லிவாக்கம், சிட்கோ நகரில், பழுதடைந்துள்ள கண்காணிப்பு 'கேரமா'க்களை சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர், விபத்து ஏற்படுத்திவிட்டுச் செல்லும் வாகனங்கள் உள்ளிட்டவற்றை கண்டறிய, சென்னையில் கண்காணிப்பு 'கேமரா'க்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
ஆனால் அவை, பல இடங்களில் முறையாக பராமரிக்கப்படாமல், பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளன.
அண்ணா நகர் மண்டலம், வில்லிவாக்கத்தில் சிட்கோ நகர் உள்ளது.
இங்குள்ள நான்காவது பிரதான சாலையின் நான்குமுனை சந்திப்பில், கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளன.
அவற்றில் பல உடைந்து, தரையை பார்த்தபடி தொங்குகின்றன. இதனால், இப்பகுதிகளில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கண்டறிவதில், சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னையில் சேதமடைந்துள்ள கண்காணிப்பு கேமராக்களை, வரும் பிப்ரவரி மாதத்திற்குள் சீரமைக்க வேண்டுமென, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து, கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

