/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துணை மின் நிலையம் மேம்படுத்த வேண்டுகோள்
/
துணை மின் நிலையம் மேம்படுத்த வேண்டுகோள்
ADDED : ஜன 27, 2024 12:44 AM
நங்கநல்லுார், ஆலந்துார் மண்டலம், 167வது வார்டில் வார்டு குழு கூட்டம் நடந்தது. மண்டல குழு தலைவர் சந்திரன் தலைமையில், வார்டு கவுன்சிலர் துர்காதேவி மற்றும் பகுதி மக்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், மாடு, நாய்களின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த வேண்டும். பல இடங்களில் மின்கம்பி அறுந்து கிடப்பதை சரி செய்ய வேண்டும்.
லட்சுமி நகர், 5, 6வது தெருக்களில் மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் வடிகால் உயர்த்த வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
நலச்சங்க கூட்டமைப்பு தலைவர் ராமராவ் கூறுகையில், ''பழவந்தாங்கல் சுரங்கப்பாதையை ஐந்தாவது பிரதான சாலையுடன் இணைக்க வேண்டும்.
''தில்லை நகர் சுரங்கப்பாலம் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.33 கி.வோ., துணை மின் நிலையத்தை 110 கி.வோ., துணை மின் நிலையமாக உயர்த்த வேண்டும்,'' என்றார்.

