/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விளிஞ்சியம்பாக்கம் ஏரியில் குடியிருப்போர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி
/
விளிஞ்சியம்பாக்கம் ஏரியில் குடியிருப்போர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி
விளிஞ்சியம்பாக்கம் ஏரியில் குடியிருப்போர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி
விளிஞ்சியம்பாக்கம் ஏரியில் குடியிருப்போர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி
ADDED : ஜன 27, 2024 12:24 AM
சென்னை,ஆவடி விளிஞ்சியம்பாக்கம் ஏரி, 100 ஏக்கர் பரப்பளவில் இருந்தது. ஆக்கிரமிப்புகளால் பாதிக்கும் மேல் சுருங்கிவிட்டதாகவும், ஏரிக்குள் கழிவுநீர் விடுவதால் மாசடைந்துள்ளதாகவும், நாளிதழ்களில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து, விசாரித்த தீர்ப்பாயம், 'ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி' திருவள்ளூர் கலெக்டர், நீர்வளத் துறை உட்பட சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த, பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
ஆவடி விளிஞ்சியம்பாக்கம் ஏரிப் பகுதியில் குடியிருப்போர், 'எங்களிடம் கேட்காமல் ஆக்கிரமிப்பாளர்கள் எனக்கூறி வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது' என தெரிவித்து, மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளது தெரிய வருகிறது.
ஏரிப்பகுதியில் குடியிருப்போர், நிலத்தின் உரிமையாளராக இருந்தால், அதற்கான ஆவணங்களைக் கொண்டு பசுமை தீர்ப்பாயத்தை அணுக, உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், இந்த விவகாரம் பசுமை தீர்ப்பாயத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டது என்பதால், தீர்ப்பாயம் விசாரிக்க முடியாது.
மனுதாரர்கள் எவரேனும், உரிய அதிகாரிகளிடம் இருந்து வெளியேற்ற அறிவிப்பை பெற்றிருந்தால், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம். வழக்கின் அடுத்த விசாரணை வரும் பிப்., 8ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

