/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செங்கல்பட்டு ஜெயின் கோவிலில் கொள்ளை
/
செங்கல்பட்டு ஜெயின் கோவிலில் கொள்ளை
ADDED : பிப் 24, 2024 11:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல் பட்டு,செங்கல்பட்டு, பெரிய மணிக்கார தெருவில், 20 ஆண்டுகள் பழமையான மகாவீரர் கோவில் உள்ளது.
இக்கோவில் தினமும் இரவு 8:30 மணி வரை திறந்து வைப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு கோவில் நிர்வாகத்தினர் வழக்கம் போல கோவிலை பூட்டிவிட்டு சென்றனர்.
நேற்று காலை கோவிலை திறக்க நிர்வாகிகள் வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ஆறு வெள்ளி கிரீடங்கள், 6 சவரன் தங்க பட்டைகள் மற்றும் உண்டியலில் இருந்த பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
செங்கல்பட்டு நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.