/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ரூபிக்ஸ் க்யூப்ஸ்' விளையாட்டு பிளஸ் 1 மாணவர் 'கின்னஸ்' சாதனை
/
'ரூபிக்ஸ் க்யூப்ஸ்' விளையாட்டு பிளஸ் 1 மாணவர் 'கின்னஸ்' சாதனை
'ரூபிக்ஸ் க்யூப்ஸ்' விளையாட்டு பிளஸ் 1 மாணவர் 'கின்னஸ்' சாதனை
'ரூபிக்ஸ் க்யூப்ஸ்' விளையாட்டு பிளஸ் 1 மாணவர் 'கின்னஸ்' சாதனை
ADDED : ஜன 26, 2024 12:48 AM

சென்னை, சென்னை, மேற்கு அண்ணா நகர் அடுத்த திருமங்கலத்தில் வசிக்கும் டாக்டர்களான ராஜ்மோகன் - ஹேமலதா தம்பதியின் மகன் கனிஷ், 16; அதே பகுதி சென்னை பப்ளிக் பள்ளியில், பிளஸ் 1 பயில்கிறார்.
சில தினங்களுக்கு முன், அண்ணா நகர் பகுதியில் நடந்த நிகழ்வில், இடைவிடாமல் 24 மணி நேரத்தில், 9,793 'ரூபிக்ஸ் க்யூப்ஸ்'களுக்கு தீர்வு கண்டு, 'கின்னஸ்' சாதனை படைத்துள்ளார். சிறுவன் கனிஷ் கூறியதாவது:
எட்டு ஆண்டுகளுக்கு முன், மூன்றாம் வகுப்பு படித்த போது,'ரூபிக்ஸ் க்யூப்' பற்றி தெரிந்து கொண்டேன்.
கடந்த 16ம் தேதி காலை, 7:45 மணிக்கு துவங்கிய சாதனை முயற்சி, அடுத்த நாள் 7:45 மணிக்கு நிறைவடைந்தது.
ஒவ்வொரு மணி நேரத்திற்கும், ஐந்து நிமிடம் ஓய்வெடுத்தேன். 24 மணிநேரத்தில், 9,793 க்யூப்ஸ்களுக்கு தீர்வு கண்டு சாதனை படைத்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.