/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.3,500 கோடி வருவாய் ஈட்டியது சத்யா ஏஜென்சீஸ்
/
ரூ.3,500 கோடி வருவாய் ஈட்டியது சத்யா ஏஜென்சீஸ்
ADDED : செப் 18, 2025 06:26 PM
சென்னை, சத்யா ஏஜென்சீஸ் நிறுவனம், 2024 - 25ம் நிதியாண்டில், 3,500 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது.
துாத்துக்குடியில், 1987ல் துவங்கப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனமான சத்யா ஏஜென்சீஸ், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா என நான்கு மாநிலங்களில் இயங்கி வருகிறது.
சமீபத்தில், கர்நாடக மாநிலத்தில், 'யூனிலெட் அப்ளைன்சஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தை, சத்யா ஏஜன்சீஸ் கையகப்படுத்தியது.
இந்நிறுவனம், கடந்த நிதியாண்டில், 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. ஒட்டு மொத்தமாக சத்யா ஏஜென்சீஸ் நிறுவனம், 2024 - 25ம் நிதியாண்டில், 3,500 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது.
இதுகுறித்து, சத்யா ஏஜென்சீஸ் தலைமை நிர்வாக அதிகாரி தீனதயாளன் கூறியதாவது:
வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை நாங்கள் பாராட்டுகிறோம்.
வாடிக்கையாளர்கள் ஆதரவு எங்கள் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்து உள்ளது.
எங்களின் தயாரிப்பு களுடன் உங்களுக்கு சேவை செய்வதில் உற்சாகமாக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.