/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தி.மு.க., பிரமுகர் மீது பாலியல் புகார்
/
தி.மு.க., பிரமுகர் மீது பாலியல் புகார்
ADDED : ஜன 26, 2024 12:33 AM
அம்பத்துார், சென்னை அம்பத்துார், கருக்கு, மாதவி தெருவைச் சேர்ந்தவர் மோகன், 62. இவர், 82வது வட்ட தி.மு.க., பிரதிநிதி. அங்குள்ள இவருக்கு சொந்தமான வீட்டில், தனியார் நிறுவன ஊழியரான சியாம், 29, என்பவர், மனைவி தமிழரசி, 21, என்பவருடன் வசித்து வருகிறார்.
இரு நாட்களுக்கு முன், தமிழரசி வீட்டில் தனியாக இருந்த போது, அங்கு சென்ற மோகன், அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சியடைந்த தமிழரசி, அம்பத்துார் மகளிர் போலீசில், மோகன் மீது புகார் செய்தார்.
போலீசார் விசாரிக்காமல், தி.மு.க., பிரமுகருக்கு சாதகமாக, தமிழரசியை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது புகார் குறித்து, விசாரணை செய்யப்படுவதாக, போலீசார் தெரிவித்தனர்.

