/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவில்களில் தீபாவளி சிறப்பு வழிபாடு
/
கோவில்களில் தீபாவளி சிறப்பு வழிபாடு
ADDED : அக் 20, 2025 11:26 PM
சென்னை, சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள கோவில்களில், தீபாவளி சிறப்பு வழிபாடு நடந்தது.
தீபாவளியை முன்னிட்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதி கோவில்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் காலை முதலே நடத்தப்பட்டன.
தீபாவளி பண்டிகை என்பதால், அதிகாலையிலே மக்கள் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து தங்களது இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
குறிப்பாக, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், வெள்ளீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், வடபழநி முருகன் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், திருப்போரூர் முருகன் கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பின் அக்கம் பக்கத்து வீட்டாருக்கு இனிப்புகள் வழங்கியும், ஒன்றாக பட்டாசுகள் வெடித்தும் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.

