/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர் வராததால் அதிருப்தி அயனாவரத்தில் திடீர் மறியல்
/
குடிநீர் வராததால் அதிருப்தி அயனாவரத்தில் திடீர் மறியல்
குடிநீர் வராததால் அதிருப்தி அயனாவரத்தில் திடீர் மறியல்
குடிநீர் வராததால் அதிருப்தி அயனாவரத்தில் திடீர் மறியல்
ADDED : ஜன 11, 2024 01:02 AM

அயனாரவம், தாகூர் நகர் பகுதியில், ஒரு மாதமாக சரிவர குடிநீர் வராததால், குடியிருப்பு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அண்ணா நகர் மண்டலம், 96 வார்டு அயனாவரத்தில், தாகூர் நகர் உள்ளது. இங்கு, மூன்று பிரதான சாலை உட்பட ஆறு தெருக்களில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில், கடந்த ஒரு மாதமாக சரிவர தண்ணீர் வரவில்லை என, மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையடுத்து நேற்று, தாகூர் நகர் மக்கள் 50க்கும் மேற்பட்டோர், கொன்னுார் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் அறிந்து வந்த அயனாவரம் போலீசார், குடிநீர் வாரிய அதிகாரியை வரவழைத்து பேச்சு நடத்தினர்.
இதுகுறித்து தாகூர் நகர் மக்கள் கூறியதாவது:
குடியிருப்பு பகுதிகளில், கடந்த ஒரு மாதமாக சரிவர தண்ணீர் வருவதில்லை. போதிய அழுத்தம் இல்லாததால், தண்ணீர் குறைவாக வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டு நடவடிக்கை இல்லை. புயல் மழையின் போது, குழாய் சேதமடைந்தாக கூறுகின்றனர். கடந்த ஒரு மாதமாகியும் நிலை அப்படியே உள்ளது. தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

