ADDED : ஜூலை 28, 2024 12:43 AM
ஆன்மிகம்
சேக்கிழார் விழா
சேக்கிழார் ஆராய்ச்சி மையம் மற்றும் ராமச்சந்திரா பல்கலை நடத்தும், 32ம் ஆண்டு தெய்வ சேக்கிழார் விழா - காலை 7:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர், வாசுதேவ நகர் விரிவு, திருவான்மியூர்.
ராதா கல்யாணம்
ஆஸ்திக சேவா சமிதி சார்பில், உஞ்சவிருத்தி, திவ்யநாமம், ராதா கல்யாணம் - -காலை 8:00 மணி முதல். இடம்: அயோத்யா அஸ்வமேத மகா மண்டபம், மேற்கு மாம்பலம்.
குருவாயூரப்பன் கோவில்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மண்டலாபிஷேகம் - -காலை 6:30 மணி. உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், இன்னிசை கச்சேரி- - மாலை 6:30 மணி. இடம்: நங்கநல்லுார்.
நாம சங்கீர்த்தன உற்சவம்
சத்குரு பாதுகா பூஜை, நாம சங்கீர்த்தனங்கள், சீதா கல்யாணம், தேவாரம், திருப்புகழ், அபங்க சங்கீர்த்தனம் - -காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை. இடம்: வரசித்தி விநாயகர் கோவில், நங்கநல்லுார்.
ஓம்சக்தி இசக்கியம்மன் கோவில்
வெற்றி விநாயகர் ஆன்மிக அறக்கட்டளை சார்பாக, 18ம் ஆண்டு ஆடி திருவிழா - காலை 8:00 மணி முதல். இடம்: ஓம்சக்தி இசக்கி அம்மன் கோவில், 1, ராஜாஜி தெரு, ஓம்சக்தி நகர், கள்ளிக்குப்பம், அம்பத்துார்.
திருப்புகழ் சொற்பொழிவு
திருவொற்றியூர் பாரதி பாசறை சார்பில், திருப்புகழ் தொடர் சொற்பொழிவு - விளக்கவுரை மா.கி.ரமணன் - காலை 10:00 மணி. இடம்: ஸ்ரீ பாலசுப்பிரமணியன் திருப்புகழ் பக்த ஜனசபை, திருவொற்றியூர்.
ஆன்மிக கூட்டம்
அண்ணா நகர் திருநெறிய தமிழ் மன்றம் சார்பாக 200வது ஆன்மிகக் கூட்டம் - மாலை 3:00 மணி. இடம்: நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், சாந்தி காலனி, அண்ணா நகர்.
ராதா கல்யாணம்
கீதா கோவிந்த மண்டலி சார்பில் உஞ்சவிருத்தி - -காலை 8:00 மணி. ராதா கல்யாண வைபவம்- - காலை 9:30 மணி. இடம்: அய்யப்பன் ஆலய சுகுமாரம் அரங்கு, பெரம்பூர்.
சொற்பொழிவு
ஸ்ரீபாலசுப்ரமணிய சங்கத்தின் 'எங்கும் உளன் கண்ணன்' - சொற்பொழிவு - மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
பொது
கைவினை கண்காட்சி
பூம்புகார் நிறுவனம் சார்பில் பாரம்பரிய கைவினை பொருட்கள் கண்காட்சி- - காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.
இலவச மருத்துவ முகாம்
வேளச்சேரி அரிமா சங்கம், அப்பல்லோ மருத் துவமனை நடத்தும் கண் சிகிச்சை முகாம். காலை 9:00 மணி முதல், இடம்: செல்லம்மாள் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, நங்கநல்லுார்.