/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தமிழ்நாடு வாலிபால் லீக் சென்னை ராக் ஸ்டார்ஸ் சாம்பியன்
/
தமிழ்நாடு வாலிபால் லீக் சென்னை ராக் ஸ்டார்ஸ் சாம்பியன்
தமிழ்நாடு வாலிபால் லீக் சென்னை ராக் ஸ்டார்ஸ் சாம்பியன்
தமிழ்நாடு வாலிபால் லீக் சென்னை ராக் ஸ்டார்ஸ் சாம்பியன்
ADDED : ஜன 14, 2024 12:37 AM
சென்னை, தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கம் சார்பில், எஸ்.என்.ஜே., தமிழ்நாடு வாலிபால் லீக் போட்டிகள், சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் பள்ளியில் ஒருவாரம் நடந்தது.
சென்னையில் முதல் முறையாக நடந்த இப்போட்டியில், சென்னை ராக் ஸ்டார்ஸ், விழுப்புரம் சூப்பர் கிங்ஸ், கிருஷ்ணகிரி புல்ஸ், விருதுநகர் கிங் மேக்கர்ஸ், குமரி பீனிக்ஸ், கடலுார் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்றன.அனைத்து போட்டிகள் முடிவில், சென்னை ராக் ஸ்டார்ஸ் மற்றும் கடலுார் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. நேற்று முன்தினம் இரவு இறுதிப் போட்டி நடந்தது.
விறுவிறுப்பான போட்டியில், துவக்கத்தில் இருந்தே சென்னை அணி ஆதிக்கம் செலுத்தியது.
முடிவில், 21 - 17, 21 - 16, 21 - 19 என்ற கணக்கில் சென்னை ராக் ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற அணிக்கு 5 லட்சம் ரூபாய், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்த அணிகளுக்கு, முறையே 3 மற்றும் 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. சிறந்த வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, அமைச்சர் கணேசன், எஸ்.டி.ஏ.டி.,யின் கூடுதல் செயலர் அதுல்ய மிஸ்ரா, வாலிபால் சங்கத்தின் வாழ்நாள் தலைவர் அர்ஜூன் துரை உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.

