ADDED : ஜன 26, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் முன், நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
அதில், 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். அவர்களை கைது செய்த போலீசார், சென்னை ராயபுரத்தில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்து, இரவு விடுவித்தனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், 'மது கடைகளில் பணிபுரியும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்; அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும்' என்றனர்.

