/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவிலில் நடனமாடிய இளைஞர்கள் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு
/
கோவிலில் நடனமாடிய இளைஞர்கள் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு
கோவிலில் நடனமாடிய இளைஞர்கள் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு
கோவிலில் நடனமாடிய இளைஞர்கள் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு
ADDED : பிப் 06, 2024 12:33 AM
மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில் நடனம் ஆடிய இளைஞர்கள், போலீசுக்கு பயந்து வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டனர்.
சென்னை, மயிலாப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோவிலில், வீடியோ எடுக்க தடை செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், அந்த கோவிலுக்குள் இரு வாலிபர்கள் குத்தாட்டம் போட்டு, அதற்கு சினிமா பாடலை சேர்த்த வீடியோ, நேற்று முன்தினம் இன்ஸ்டாகிராமில் பதிவாகி இருந்தது.
இதைப் பார்த்த கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்து, உடனடியாக சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
கோவிலில் குத்தாட்டம் போட்ட வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டனர்.
போலீசில் புகார் அளித்ததும், கோவிலில் குத்தாட்டம் போட்ட வாலிபர்கள் இருவர், திடீரென ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தனர்.
அதில், கடந்த டிம்பர் மாதம் கோவிலில் நடனம் ஆடிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
இதுபோன்ற தவறுகளை இனிமேல் நாங்கள் செய்ய மாட்டோம். எங்களை கோவில் நிர்வாகம் மன்னிக்க வேண்டும் எனக் கூறியிருந்தனர்.
இதுகுறித்து, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.