/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவள்ளூர் மாவட்ட செஸ் போட்டி 500 சிறுவர் - சிறுமியர் உற்சாகம்
/
திருவள்ளூர் மாவட்ட செஸ் போட்டி 500 சிறுவர் - சிறுமியர் உற்சாகம்
திருவள்ளூர் மாவட்ட செஸ் போட்டி 500 சிறுவர் - சிறுமியர் உற்சாகம்
திருவள்ளூர் மாவட்ட செஸ் போட்டி 500 சிறுவர் - சிறுமியர் உற்சாகம்
ADDED : ஜன 20, 2024 11:57 PM

சென்னை, திருவள்ளூர் மாவட்ட சதுரங்க சங்கத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான செஸ் போட்டி, பூந்தமல்லியில் உள்ள பிரதியுஷா பொறியியல் கல்லுாரியில் நேற்று துவங்கியது.
இதில், ஏழு வயது முதல், 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ - மாணவியருக்கு, தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன.
போட்டியில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்று, அசத்தி வருகின்றனர்.
முதல் நாளான நேற்று, நான்கு சுற்றுகள் நடந்தன. இறுதி நாளான இன்று, மீதமுள்ள மூன்று சுற்றுகள் நடக்கின்றன.
தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தின் கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா, குகேஷ், கார்த்திகேயன் முரளி, வைஷாலி மற்றும் வர்ஷினி ஆகியோரை கவுரவிக்கும் நிகழ்ச்சியும் நடக்கின்றன.