/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவொற்றியூர் அரசு மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படும்: அமைச்சர்
/
திருவொற்றியூர் அரசு மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படும்: அமைச்சர்
திருவொற்றியூர் அரசு மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படும்: அமைச்சர்
திருவொற்றியூர் அரசு மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படும்: அமைச்சர்
ADDED : ஜன 26, 2024 12:49 AM

திருவொற்றியூர், திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில், எம்.ஆர்.எப். நிறுவன சமூக மேம்பாட்டு நிதி 55 லட்சம் ரூபாய் செலவில், கண் சிகிச்சை அறுவை அரங்கம் புதிதாக அமைக்கப்பட்டது.
இந்த அரங்கை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்துவைத்து, ஹெச்.பி.சி.எல். நிறுவனத்தின் 20 லட்சம் ரூபாய் நிதியில் அமைக்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை பார்வையிட்டார்.
பின், அவர் அளித்த பேட்டி:
சிறப்பாக செயல்படும் திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில், எம்.பி. கலாநிதி, எம்.எல்.ஏ., சங்கர் முயற்சியால், டயாலிசிஸ் மையம் அமைக்கப்பட்டது.
பொதுமக்கள் கோரிக்கையையடுத்து, எம்.ஆர்.எப்., - எச்.சி.பி.எல். நிறுவனங்களின் சமூக மேம்பாட்டு நிதியில், 75 லட்சம் ரூபாய் செலவிலான கண் அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தினமும் 850 - 900 புறநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். 50 படுக்கை வசதிகள் உள்ளன. உள்நோயாளிகளாக, 25 - 30 பேர் பயன்பெறுகின்றனர்.
இங்கு, மருத்துவர்கள் பணியிடங்கள் காலி இல்லை. இருப்பினும், 24 மணி நேரமும் மருத்துவமனை செயல்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
காய்ச்சல் பாதிப்பு வந்தவுடன், மருத்துவரை அணுகாமல், நோய் முற்றிய நிலையில், மருத்துவமனை செல்வதால், உயிரிழப்பு ஏற்படுகிறது. பனிக் கால சிறப்பு முகாம்கள் ஏதுமில்லை.
அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஏற்கனவே மூன்று நாள் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது. நுரையீரல் சிறப்பு முகாம், வரும் ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

