/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.18 லட்சம் கடனாக பெற்று மோசடி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது
/
ரூ.18 லட்சம் கடனாக பெற்று மோசடி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது
ரூ.18 லட்சம் கடனாக பெற்று மோசடி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது
ரூ.18 லட்சம் கடனாக பெற்று மோசடி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது
ADDED : ஜூன் 20, 2025 12:13 AM

ஆவடி, ஆவடி, சங்கர் நகர், அன்னை அப்பார்ட்மென்ட் குடியிருப்பைச் சேர்ந்தவர் தேவி, 49. அவருக்கு, ஆவடி, ஜெ.பி., எஸ்டேட் பகுதியில் வசிக்கும் போது, தீபா, 40, அவரது கணவர் கண்ணன், 45, மற்றும் அவரது குடும்பத்தினருடன் பழக்கம் ஏற்பட்டது.
கடந்த 2023ல், கண்ணன், தீபா, தீபாவின் தம்பி ராம்குமார், 36, அவரது மனைவி திவ்யபாரதி, 41, ஆகியோர், தேவியிடம் கடன் பெற்று தருமாறு கூறியுள்ளனர். மேலும், கடன் தொகைக்கான மாத தவணையை தவறாமல் கட்டி விடுவதாக, தீபா நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.
அதன்படி, தன் பெயரில், பல்வேறு தனியார் பைனான்ஸ் நிறுவனங்களிடமிருந்து இருந்து, 3.26 லட்சம் ரூபாய் கடன் பெற்று, தீபாவிடம் கொடுத்துள்ளார். அதேபோல், அன்னை அப்பார்ட்மென்டில் வசிக்கும் ஆதித்யன் என்பவரிடமும், 3 லட்சம் ரூபாய் தீபா கடனாக பெற்றுள்ளார்.
தவிர, அதேபோல் பல பேரிடம் இருந்து மொத்தமாக, 17.76 லட்சம் ரூபாய் வரை, தீபா மற்றும் குடும்பத்தினர் கடன் பெற்றுள்ளனர்.
கடந்த 2024 வரை கடன் வாங்கிய பணத்தை முறையாக கட்டி வந்துள்ளனர். அதன் பின், கடனை அடைக்காமல் அனைவரும் தலைமறைவாகினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தேவி, ஆதித்யன் உள்ளிட்டோர், கடந்த பிப்., மாதம் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.
அதன்படி விசாரித்த ஆவடி குற்றப்பிரிவு போலீசார், திருவண்ணாமலை மாவட்டம், மத்தனாங்குளம் தெருவில் தலைமறைவாக இருந்த தீபா, ராம்குமார் மற்றும் திவ்ய பாரதி ஆகியோரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கண்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.