ADDED : ஜன 26, 2024 12:48 AM
ஆன்மிகம்
தெப்பத் திருவிழா
கபாலீஸ்வரர் கோவில்: சுவாமி தெப்பத்தில் பவனி - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
திருவேட்டீஸ்வரர் கோவில்: செண்பகாம்பிகை தெப்பத்தில் பவனி - இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
காரணீஸ்வரர் கோவில்: வள்ளி, தேவசேனா உடனுறை சுப்ரமணியர் தெப்பத்தில் பவனி, இரவு 7:00 மணி. இடம்: கோபதிசரஸ் குளம், சைதாப்பேட்டை.
காமாட்சி அம்மன் கோவில்: வைகுண்ட பெருமாள், காமாட்சி அம்மன் தெப்பத்தில் பவனி. இரவு 7:00 மணி. இடம்: மாங்காடு.
தை வெள்ளி வழிபாடு
- ஒட்டீஸ்வரர் கோவில்: கோலாச்சி அம்மன் கோவிலிலிருந்து 108 பால் குடம் புறப்பாடு - காலை 8:00 மணி. 108 குடம் பாலாபிஷேகம், அன்னம்பாலிப்பு - காலை 11:00 மணி முதல். இடம்: ஒட்டியம்பாக்கம்.
பத்மாவதி தாயார் கோவில்: குத்துவிளக்கு பூஜை - மாலை 6:00 மணி. இடம்: திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஜி.என்.சாலை, தி.நகர்.
சென்னை ஓம் கந்தாஸ்ரமம்: மாதா புவனேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 10:00 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 5:00 மணி. இடம்:1, கம்பர் தெரு, சேலையூர்.
சிவசுப்ரமணிய சுவாமி சன்னிதி: சிறப்பு அபிஷேகம் - காலை 5:00 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 5:00 மணி. கந்தர் அலங்காரம்: ராகவன்ஜி - மாலை 6:00 மணி. இடம்: திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகம், கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை.
திரிசக்தி அம்மன் கோவில்: அபிஷேக அலங்கார ஆராதனை - காலை 7:00 மணி முதல். இடம்: தாழம்பூர்.
மஹா சண்டி ஹோமம்: லலிதா சகஸ்ரநாம பாராயணம் - மாலை 4:00 மணி. ஹோமம் - மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி. இடம்: காமாட்சி மண்டலி டிரஸ்ட், சங்கர மடம், மேற்கு மாம்பலம்.
நாமசங்கீர்த்தனம்: ஸ்ரீதர் கோபாலசுந்தர பாகவதர் குழுவினர், மாலை 6:30 மணி. இடம்: குமரன்குன்றம், குரோம்பேட்டை.
கலை விழா
திருமலை - திருப்பதி கோவில்: டாக்டர் வி.எல்.சுதர்சன் குழுவினர் பாட்டு - மாலை 6:30 மணி. இடம்: தி.தி.தே., தகவல் மையம், வெங்கட் நாராயணா சாலை, தி.நகர்.
தியாக பிரம்ம கான சபா: சர்வஸ்ரீ மதன் பரதம் - மாலை 5:00 மணி. நிஷ்கலா ராஜீவ் பரதம் - இரவு 7:00 மணி. இடம்: வாணி மஹால், தி.நகர்.
பொது
ஆண்டு விழா: நியூ பிரின்ஸ் மேல்நிலைப் பள்ளி, பவானி சீனியர் செகண்டரி பள்ளியின் ஆண்டு விழா. பங்கேற்பு: முனைவர் ப.இறையன்பு, முனைவர் ஆர்.ராமன். மாலை 4:30 மணி. மாணவர்களின் அறிவியல், கலை, கைவினை கண்காட்சி - -காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: எண். 35 - 1ஏ, 8வது தெரு, நியூ காலனி, ஆதம்பாக்கம்.
ஆண்டு விழா: நர்த்தன கணநாத பரதநாட்டிய வித்யாலயாவின் 41வது ஆண்டு விழா. பங்கேற்பு: டாக்டர் காவேரி ரமேஷ், மாலை 6:00 மணி. இடம்: கிருஷ்ண கான சபா மெயின் ஹால், மகாராஜபுரம் சந்தானம் சாலை, தி.நகர்.
துவக்க விழா: இலவச டயாலிசஸ் சேவை. துவக்கி வைப்பவர்: மேயர் பிரியா ராஜன், மாலை 4:00 மணி. இடம்: பேகம் சபீயா நாசர் உசேன் டிரஸ்ட் மருத்துவமனை, ஜமாலியா, பெரம்பூர்.
ஜம்போ சர்க்கஸ்: மதியம் 1:00, மாலை 4:00, இரவு 7:00 மணி. இடம்: பிரியோ பிளாசா கிரவுண்ட், கோவர்த்தனகிரி, பூந்தமல்லி, ஆவடி உயர்சாலை அம்மன் கோவில் அருகில், தொடர்புக்கு: 62383 47006.
கண்காட்சி
செயின்ட் ஜான்ஸ் பப்ளிக் பள்ளி: மாணவர்களுக்கான கல்வி, வேலை வாய்ப்பு கண்காட்சி, கருத்தரங்கம், பயிலரங்கம். காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை. இடம்: ஏரி கட்டு சாலை, ஜல்லடியன்பேட்டை, மேடவாக்கம்.
விங்க்ஸ் கன்வென்ஷன் உள்அரங்கம்: சர்வதேச நாய்கள் கண்காட்சி. காலை 9:00 மணி முதல். இடம்: செயின்ட் ஜார்ஜ் பள்ளி மைதானம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, பச்சையப்பன் கல்லுாரி எதிரில், ஷெனாய் நகர்.
தீவுத்திடல்: சுற்றுலா பொருட்காட்சி. காலை 11:00 மணி முதல். இடம்: சென்னை.
ரயில்வே மைதானம்: பொருட்காட்சி மற்றும் ஆழ்கடல் வண்ண மீன்கள் கண்காட்சி. மதியம் 3:00 முதல் இரவு 10:00 மணி வரை. இடம்: தாம்பரம்.

