/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டவர் சரிந்து விழுந்ததால் பரபரப்பு
/
டவர் சரிந்து விழுந்ததால் பரபரப்பு
ADDED : மே 29, 2025 12:29 AM
வேப்பேரி,வேப்பேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில் எதிரே, சுரேஷ் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இதன் மாடியில் பி.எஸ்.என்.எல்., தொலைபேசி டவர், ஆறு ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்டது.
நேற்று காலை 10:45 மணிக்கு, டவர் திடீரென சரிந்து, பக்கத்து வீட்டில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இரு வீட்டின் ஒரு பக்க சுவர் பாதிப்புக்குள்ளானது.
விபத்து குறித்து, பாதிக்கப்பட்ட பக்கத்து வீட்டு உரிமையாளர் கூறியதாவது:
சேதமடைந்த பகுதிகளை, டவர் அமைத்தவர்களே சரி செய்து தருவதாக கூறினர். குடியிருப்பு பகுதியில் இந்த மாதிரி டவர் வைக்கக்கூடாது. ஆனால், யாரிடம் அனுமதி பெற்று வைத்தனர் என தெரியவில்லை. விபத்து குறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.