/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை முழுதாக மீட்க ஒத்துழைக்க வேண்டும் மாநகராட்சிக்கு தீர்ப்பாயம் உத்தரவு
/
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை முழுதாக மீட்க ஒத்துழைக்க வேண்டும் மாநகராட்சிக்கு தீர்ப்பாயம் உத்தரவு
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை முழுதாக மீட்க ஒத்துழைக்க வேண்டும் மாநகராட்சிக்கு தீர்ப்பாயம் உத்தரவு
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை முழுதாக மீட்க ஒத்துழைக்க வேண்டும் மாநகராட்சிக்கு தீர்ப்பாயம் உத்தரவு
ADDED : ஜன 26, 2024 12:51 AM
சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நில ஆக்கிரமிப்புகள் குறித்து, நாளிதழ்களில் வந்த செய்திகளின் அடிப்படையில், பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.
இதற்கிடையே 'பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஆக்கிரமிப்புகளையும், குப்பை கிடங்கையும் அகற்றி, அதன் அசல் பரப்பை மீட்டெடுக்க வேண்டும்' என, வழக்கறிஞர் மேகநாதன் என்பவர், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
'வேறுபட்ட உலகளாவிய நிலைப்படுத்துதல் அமைப்புகள் -- டி.ஜி.பி.எஸ்., முறைப்படி, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, ஆக்கிரமிப்பாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது வரை 1,835 ஏக்கர் பராமரிப்புக்காக வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது' என தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
பள்ளிக்கரணையில் 425 ஏக்கர் சதுப்பு நிலம் சென்னை மாநகராட்சி வசம் உள்ளது. அதில் 40 ஏக்கர் நிலம், வனத்துறையிடம் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை.
ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பழைய நிலைக்கு மீட்டெடுக்க, சென்னை மாநகராட்சி ஒத்துழைக்க வேண்டும்.
தமிழக அரசின் 'எல்காட்' வசம் 400 ஏக்கர், ரயில்வேயிடம் 115 ஏக்கர், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்திடம் 50 ஏக்கர், பாரி நகர், மகாலட்சுமி நகர், அம்பேத்கர் நகர், ம.பொ.சி. நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் 36.75 ஏக்கரிலும் உள்ளன.
எந்த உரிமையும் இல்லை என்றால், அவர்கள் எப்படி வெளியேற்றப்படுவர் என்பதற்கான தீர்வு குறித்து, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் பிப்., 9ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

