/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டெய்லரை அடித்து கொன்ற இருவருக்கு 'காப்பு'
/
டெய்லரை அடித்து கொன்ற இருவருக்கு 'காப்பு'
ADDED : ஜன 26, 2024 12:53 AM
குன்றத்துார்,குன்றத்துார் நகராட்சி மணஞ்சேரி, கே.எம்.கே., நகரை சேர்ந்தவர் கண்ணன், 37; டெய்லர். இவரது வீட்டின் அருகே கார்த்திக் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். கண்ணன் குடித்துவிட்டு அடிக்கடி கார்த்திக்கிடம் தகராறில் ஈடுப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 16ம் தேதி கண்ணனுக்கும், கார்த்திக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் கண்ணனை சரமாரியாக தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த கண்ணன், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். குன்றத்துார் போலீசார் கார்த்திக், பாலா என இருவரையும், கடந்த 20ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கண்ணன் நேற்று சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். இதையடுத்து, கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

