/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேலங்காடு மயான பூமி 3 நாட்கள் இயங்காது
/
வேலங்காடு மயான பூமி 3 நாட்கள் இயங்காது
ADDED : ஜூன் 06, 2025 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,பராமரிப்பு பணிகள் காரணமாக, வேலங்காடு மயான பூமியில், தகன மேடை மூன்று நாட்கள் இயங்காது என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு:
அண்ணா நகர் மண்டலம், 102வது வார்டுக்கு உட்பட்ட வேலங்காடு மயான பூமியில், மின் மயான தகனமேடையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, வரும் 6ம் தேதி முதல், 9ம் தேதி வரை மயான பூமி இயங்காது.
பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில், அருகில் உள்ள வில்லிவாக்கம், ஓட்டேரி மயான பூமிகளை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.