/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாரிய குடியிருப்போர் நலச்சங்கங்கள் கலைப்பா? குறுஞ்செய்தியால் வீட்டு உரிமையாளர்கள் குழப்பம்
/
வாரிய குடியிருப்போர் நலச்சங்கங்கள் கலைப்பா? குறுஞ்செய்தியால் வீட்டு உரிமையாளர்கள் குழப்பம்
வாரிய குடியிருப்போர் நலச்சங்கங்கள் கலைப்பா? குறுஞ்செய்தியால் வீட்டு உரிமையாளர்கள் குழப்பம்
வாரிய குடியிருப்போர் நலச்சங்கங்கள் கலைப்பா? குறுஞ்செய்தியால் வீட்டு உரிமையாளர்கள் குழப்பம்
ADDED : பிப் 02, 2024 12:00 AM
சென்னை, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், சென்னையில் 1.30 லட்சம் வீடுகள் உள்ளன. குடியிருப்புகளை வாரியம் பராமரித்து வந்த நிலையில், 2021ம் ஆண்டு, ‛நம் குடியிருப்பு நம் பொறுப்பு' என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
குடியிருப்பின் பாதுகாப்பு, சுகாதாரம், பொறுப்புணர்வு, சேமிப்பு திறனை மேம்படுத்தவும், வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் இத்திட்டம் பயன் அளிக்கிறது.
இத்திட்டத்தில், பிளாக் வாரியாக குடியிருப்போர் நலச்சங்கம் துவங்கி, அதன் வழியாக, குடியிருப்புகளை பராமரிக்க வேண்டும். வாரியம் வசூலித்த மாதாந்திர பராமரிப்பு தொகையான, 250 மற்றும் 750 ரூபாயை, நலச்சங்கங்கள் வசூலித்து பராமரிக்க அனுமதி வழங்கப்பட்டது. வசூலிப்புக்கு ஈடாக, அரசும் தொகை வழங்குகிறது.
இந்த வகையில், சென்னையில் 180 நலச்சங்கங்கள் துவங்கப்பட்டு உள்ளன. சங்கங்களே பராமரிப்பு கட்டணம் வசூலித்து வந்த நிலையில், நேற்றுமுன்தினம், வாரியம் ஒவ்வொரு பயனாளிகளுக்கும், குறுஞ்செய்தி அனுப்பி உள்ளது.
அதில், வீட்டு எண்களை குறிப்பிட்டு, வாரிய இணைய தளம் வாயிலாக பராமரிப்பு கட்டணம் செலுத்த வேண்டும் என, கூறப்பட்டது. இதனால், வீட்டு உரிமையாளர்களும், நலச்சங்க நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
நலச்சங்கம் துவங்கி, மக்களே குடியிருப்புகளை பராமரிக்க, சில அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், மக்கள் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த குறுஞ்செய்தி, சங்கத்தை கலைக்க முடிவு செய்யப்பட்டதோ என மக்களிடம் அச்சம் ஏற்பட்டது.
இதனால் தெளிவு இல்லாமல் இருப்பதுடன், பராமரிப்பு கட்டணம் செலுத்த முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
இது குறித்து, வாரிய அதிகாரிகள் கூறியதாவது: இத்திட்டம், மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றதுடன், வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து குடியிருப்பை பார்வையிட வந்த அதிகாரிகள் பாராட்டி செல்கின்றனர். தவணை மற்றும் பராமரிப்பு கட்டணம், 210 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவை உள்ளதால், அதை வசூலிக்க குறுஞ்செய்தி அனுப்பினோம். சோதனை அடிப்படையில், 1,200 வீடுகளுக்கு அனுப்பினோம். இதில், தவறுதலாக சங்கம் துவங்கிய குடியிருப்புகளுக்கும் குறுஞ்செய்தி சென்றுள்ளது. வீட்டு உரிமையாளர்கள் சங்கத்தில் தான் பராமரிப்பு கட்டணத்தை செலுத்த வேண்டும். சங்கம் துவங்காத குடியிருப்புகளில் வசிப்போர், வாரிய இணையதளத்தில் செலுத்த வேண்டும். சங்கங்களை கலைக்கும் எண்ணம். வாரியத்திற்கு இதுவரை இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

