/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கண்ணில் மிளகாய் பொடி துாவி செயின் பறிக்க முயன்ற பெண் கைது
/
கண்ணில் மிளகாய் பொடி துாவி செயின் பறிக்க முயன்ற பெண் கைது
கண்ணில் மிளகாய் பொடி துாவி செயின் பறிக்க முயன்ற பெண் கைது
கண்ணில் மிளகாய் பொடி துாவி செயின் பறிக்க முயன்ற பெண் கைது
ADDED : ஜூன் 18, 2025 11:55 PM

ஆர்.கே.நகர், தண்டையார்பேட்டை, நேதாஜி நகர் முதலாவது தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி அனுசுயா, 29. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
நேற்று அனுசுயா வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டின் 'காலிங் பெல்' அடித்துள்ளது. கதவை திறந்து பார்த்தபோது, பர்தா அணிந்து வந்தவர் திடீரென அனுசுயாவின் முகத்தில் மிளகாய் பொடியை துாவி, ஐந்தரை சவரன் தாலி செயினை பறிக்க முயன்றார்.
அனுசுயா தாலி செயினை இறுக்கமாக பிடித்து கொண்டதால், செயின் அறுந்து கீழே விழுந்துள்ளது. மேலும், மர்ம நபரின் முகத்தை பார்க்க, அனுசுயா முக கவசத்தை பிடித்துள்ளார். அப்போது அந்த பெண், அனுசுயாவின் 'நைட்டி' ஆடையை கிழித்து விட்டு தப்பினார்.
இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுசுயா கொடுத்த தகவலின்படி, ஆர்.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அனுசுயா கொடுத்த அடையாளங்களின் அடிப்படையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் அய்யம்மாள், 36, என்பவரை கைது செய்தனர்.