ADDED : ஜன 26, 2024 12:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர்,
திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் அருகே, செயல்படும் பிரபல பாத்திரக் கடை சார்பில், கடந்த 12ம் தேதி சில பாத்திரங்கள் காணாமல் போனதாக திருவொற்றியூர் காவல் நிலையத்தில் வாய்மொழி புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் விசாரித்து டபரா செட், தட்டு உள்ளிட்ட பாத்திரங்களை திருடிய தண்டையார்பேட்டை, சிவாஜி நகரைச் சேர்ந்த பாத்திமா, 33, வரலட்சுமி, 37, விஜயலட்சுமி, 44, ஆகிய மூன்று பெண்களை, போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

