ADDED : மே 25, 2025 08:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முகப்பேர்:முகப்பேர் கிழக்கு, கோல்டன் ஜார்ஜ் நகரைச் சேர்ந்தவர் சரத்குமார், 32. இவர், தன் டி.வி.எஸ்., எக்ஸ்.எல் மொபெட்டை, வீட்டின் வாசலில், கடந்த 17ம் தேதி மதியம் நிறுத்திச் சென்றார்.
மாலை, அவரது மொபெட் திருடு போனது தெரிந்தது. இது குறித்து, ஜெ.ஜெ.நகர் போலீசார் விசாரித்தனர்.
இதில், மொபெட்டை திருடியது விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சீனிவாசன், 22, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், மொபெட்டை பறிமுதல் செய்தனர்.