Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/சென்னை/யு டியூப் சேனல் துவக்க பயிற்சி

யு டியூப் சேனல் துவக்க பயிற்சி

யு டியூப் சேனல் துவக்க பயிற்சி


ADDED : ஜன 21, 2024 12:01 AM

Follow on Google

ADDED : ஜன 21, 2024 12:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, சொந்தமாக யு டியூப் சேனல் உருவாக்குதல், இணையதளத்தில் யு டியூப் சேனலை பயன்படுத்தி தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல் குறித்து மூன்று நாள் பயிற்சி வகுப்பு, சென்னையில் நடக்க உள்ளது.

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இப்பயிற்சியை அளிக்கிறது. சமூக ஊடக சந்தைப்படுத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு, ஆன்லைன் மார்கெட்டிங் மற்றும் விதிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

வரும் 29 முதல் 31ம் தேதி வரை, தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது. கட்டணம் 4,000 ரூபாய்.

ஆர்வம் உடைய தொழில் முனைவோர், 18 வயதுக்கு மேற்பட்ட, குறைந்தபட்சம் 10ம் வகுப்பு கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விபரங்களைப் பெற விரும்புவோர், www.editn.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் அல்லது 044 - 22252081, 22252082, 8668102600, 8668100181, 7010143022 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap