/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓராண்டில் 337 ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சை! அரசு மருத்துவமனை டாக்டர்கள் தகவல்
/
ஓராண்டில் 337 ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சை! அரசு மருத்துவமனை டாக்டர்கள் தகவல்
ஓராண்டில் 337 ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சை! அரசு மருத்துவமனை டாக்டர்கள் தகவல்
ஓராண்டில் 337 ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சை! அரசு மருத்துவமனை டாக்டர்கள் தகவல்
ADDED : ஜூலை 16, 2024 02:11 AM

பொள்ளாச்சி;'பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த ஓர் ஆண்டில், 337 ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன,' என, டாக்டர்கள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், அறுவை சிகிச்சை துறையின் சார்பில், உலக ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சை தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் கடந்த ஒரு வாரத்தில் செய்யப்பட்ட, எட்டு ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சை நோயாளிகள், அவருடைய உறவினர்களும் அழைக்கப்பட்டு கேக் வெட்டி இந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா தலைமை வகித்தார். அறுவை சிகிச்சை டாக்டர் கார்த்திக்கேயன், இருப்பிட மருத்துவ அலுவலர் சரவணபிரகாஷ், பிளாஸ்டிக் சர்ஜரி டாக்டர் சங்கமித்ரா மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.
டாக்டர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த, மூன்று ஆண்டுகளாக அறுவை சிகிச்சை பிரிவில், ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கை அறுவை சிகிச்சை, நரம்பு தசை நாறு, தீக்காயம்,புற்றுநோய் பாதித்த பகுதியில் மீண்டும் சதை அமைத்தல், சர்க்கரை நோய்க்கு பாத புண் ஆற்றுதல், வெட்டப்பட்ட விரலுக்கு மாற்றாக விரல் பொருத்துதல் உள்ளிட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது.
கை வெட்டப்பட்ட இரண்டு மணி நேரத்துக்குள் உடனடியாக வந்தால், அறுவை சிகிச்சையால் சரி செய்து விடாலாம். தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து செய்யும் இச்சிகிச்சை, இலவசமாக செய்யப்படுகிறது.
கடந்த ஓர் ஆண்டில், 337 ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அதில், 90 தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சை முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அதில், மார்பகம் அகற்றிய நோயாளிக்கு சதை வைத்தும்; மிஷினில் கையை உள்ளே விட்டவருக்கு ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நெருப்பு காயம் ஏற்பட்டவருக்கும்; குழந்தைக்கு கையில் சுடு தண்ணீர் ஊற்றி தோல் போன இடத்தில் ஒட்டு உறுப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கைவிரல் நசுங்கிய காயத்திற்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணருடன் சேர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கால் பாதத்தில் புற்று நோய் பாதித்த இடத்திலும், கணுக்காலில் ஏற்பட்ட தசை நார் பாதிப்புக்கும், ஓட்டு உறுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சரால் துவங்கப்பட்ட, 'பாதம் பாதுகாப்போம் திட்டம்' வாயிலாக சிறப்பு பாத சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இந்த துறை வாயிலாக பாதத்தில் புண் ஏற்பட்டு பாதிப்புகள் ஏற்பட்ட சர்க்கரை நோயாளிகள் சிறப்பு சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும். சரியான நேரத்தில் சிகிச்சைக்கு வந்தால் கால் விரல், கால் அகற்றாமல் சிகிச்சை அளிக்க முடியும்.
ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சை (பிளாஸ்டிக் சர்ஜரி) என்பது நடிகர், நடிகைகள் அழகு படுத்துவதற்கு மட்டுமல்ல; ஏழை, எளிய மக்கள் பாதிப்படைந்தால் அவர்களது உடல் பாதிப்புகளை சரி செய்வதற்குதான் என்பதை மக்கள் உணர வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.