/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அபார்ட்மென்டுக்குள் ஓர் டிபார்ட்மென்ட் ஸ்டோர்!
/
அபார்ட்மென்டுக்குள் ஓர் டிபார்ட்மென்ட் ஸ்டோர்!
ADDED : ஜூன் 09, 2024 12:35 AM

குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் பாதுகாப்பா இருக்கணும், அதேசமயம் நல்ல சுற்றுச்சூழலும், அலுவலகத்துக்குப் போக பக்கமா இருக்கணும்னு, யோசிச்சுதான் பெரும்பாலான மக்கள் அபார்ட்மென்டுகளை தேர்ந்தெடுக்குறாங்க.
10, 11வது மாடியாக இருந்தாலும் பரவாயில்லை அபார்ட்மென்டிலேயே வீடு பார்த்துக்கலாம்னு யோசிக்கிறவங்களுக்கு, பெரும் சவாலாக இருப்பது அன்றாடத் தேவையான காய்கறி, சமையல் பொருட்கள் பர்ச்சேஸ்தான்.
இவங்க கவலைய போக்கும்விதமா, எல்லா பொருளும் ஒரே கூரையின்கீழ் கிடைக்கிற மாதிரி அபார்ட்மென்டுக்குள்ளயே ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரை (அமரா கிராசரி) கொண்டு வந்திருக்காரு, கோவையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் ராமசுப்பிரமணியம்.
அவரிடம் பேசினோம்...
நான் இன்ஜினியரிங் கிராஜூவேட். கடந்த 20 வருசமா ஐ.டி., ஊழியராக வேலை பார்த்து வந்தேன். கடந்த 2 வருசத்துக்கு முன்னாடி எதாவது பிசினஸ் பண்ணலாம்னு யோசிச்சு, சுந்தராபுரத்துல சூப்பர் மார்க்கெட் ஆரம்பிச்சோம்.
இந்த தொழில்ல, நிறைய போட்டியாளர்கள் இருக்காங்க. சென்டிரலைஸ்டு பர்ச்சேஸ் பண்றதால, வெளியில போய் என்ன விலைக்கு பொருள் வாங்குறாங்களோ, அதே விலைக்கு நாங்களும் கொடுக்குறோம்.
எங்களோட லாபத்துல வாடிக்கையாளர்களுக்கு, 5 சதவீத சலுகையையும் கொடுக்குறோம். 25 பெண்களுக்கு, இதன் மூலமாவேலைவாய்ப்பு கிடைச்சுருக்கு.
காலையில 6:30 மணிக்கே கடைகளைத் திறந்துருவோம். காய்கறிகள், பழங்கள், பிரெட் எல்லாமே வாடிக்கையாளர்களின் டோர் ஸ்டெப்புக்கே போயிரும். வயதானவர்களுக்கு இது பெரிய உதவியா இருக்கும். காலை 6.30 டூ 10 மணி வரை ப்ரீ ஹோம் டெலிவரி.
இதன் மூலமா டிராபிக், பெட்ரோல், நேரம், அலைச்சல் எல்லாமே மிச்சம். இதுபோல கடை தொடங்கணும்னு விரும்புவறங்களுக்கும் நாங்க பொருள்களை விநியோகம் செய்து, உதவி செய்கிறோம்.
இப்போ ஒரு பெரிய ஸ்டோர், சவுரிபாளையம், பீளமேடு, நஞ்சுண்டாபுரத்தில் உள்ள 3 அபார்ட்மென்ட்ல சூப்பர் மார்க்கெட் இருக்கு. இதை 10 முதல் 15 அபார்ட்மென்ட்ல விரிவுபடுத்தணும்ங்கறதுதான் என் கனவு.
- கண்கள் விரிய பேசினார் ராமசுப்ரமணியம்.