/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழா கொடியேற்றம்
/
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழா கொடியேற்றம்
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழா கொடியேற்றம்
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழா கொடியேற்றம்
ADDED : ஜூலை 29, 2024 02:50 AM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக் குண்டம் விழா, 23ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 26ம் தேதி லட்சார்ச்சனை நடந்தது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜை நடை பெற்று வருகிறது.
நேற்று முன் தினம் இரவு கிராம சாந்தி பூஜையும், நேற்று காலை கொடியேற்றமும் நடந்தது. தேக்கம்பட்டி சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள், ஊர் கவுடர் தலைமையில், சிம்மம் உருவம் பொறித்த மஞ்சள் நிறக் கொடியை ஊர்வலமாக எடுத்து வந்தனர். ஆற்றின் கரையில் உள்ள முத்தமிழ் விநாயகர் கோவிலில், கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
பின்பு அங்கிருந்து தேக்கம்பட்டி ஊர் பொது மக்களை, கோவில் நிர்வாகத்தினர் கோவிலுக்கு அழைத்து வந்தனர். கோவிலில் அம்மன் சுவாமிக்கு முன் வைத்து கொடிக்கு, சிறப்பு பூஜை செய்தனர். பின் கோவில் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து யாக வேள்வி பூஜைகள் நடந்தன. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு சிம்ம வாகனத்தில், அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இன்று மாலை பொங்கல் வைத்து, குண்டம் திறக்கப்பட உள்ளது. 30ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பும், அதை தொடர்ந்து காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்கும் திருவிழாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் மேனகா, உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.