/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கீதாஞ்சலி பள்ளியில் பதவியேற்பு விழா
/
கீதாஞ்சலி பள்ளியில் பதவியேற்பு விழா
UPDATED : ஜூலை 16, 2024 02:30 AM
ADDED : ஜூலை 16, 2024 02:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கீதாஞ்சலி பப்ளிக் பள்ளியில், 2024 - 25ம் கல்வியாண்டுக்கான மாணவர் மன்ற பதவியேற்பு விழா நடந்தது.
கீதாஞ்சலி பள்ளிகளின் இயக்குனர் நடராஜன் தலைமை வகித்தார். செயலாளர் அழகிரிசாமி, 'மாணவர்களின் தலைமை பண்பு, வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள்' குறித்து பேசினார்.
மாணவ, மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. மாணவர் மன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
பள்ளி முதல்வர் கவிதா, சச்சிதானந்த ஜோதி நிகேதன் இன்டர்நேஷனல் பள்ளி கல்வியியல் ஆலோசகர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.