/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விமானப்படையின் 'திஷ்ஷா' வாகன கண்காட்சி
/
விமானப்படையின் 'திஷ்ஷா' வாகன கண்காட்சி
ADDED : ஜூலை 11, 2024 11:21 PM

சூலுார் : விமானப்படை குறித்து மாணவ, மாணவியர் அறிந்து கொள்ளும் வகையில், 'திஷ்ஷா' வாகன கண்காட்சி ஆர்.வி.எஸ்., கல்லுாரியில் நடந்தது.
இந்திய விமானப்படையின் சார்பில், 'திஷ்ஷா' எனும் வாகனம் மூலம் கல்லுாரிகளில் கண்காட்சி நடத்தப்படுகிறது. கடந்த, 2015ம் ஆண்டு துவங்கப்பட்ட இக்கண்காட்சி வாகனம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்து, விமானப்படை குறித்து மாணவ, மாணவியரிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது. சூலுார் விமானப்படைத்தளம் சார்பில், ஆர்.வி.எஸ்., கலை அறிவியல் கல்லுாரிக்கு திஷ்ஷா வாகனம் நேற்று வந்தது. கல்லுாரியின் தேசிய மாணவர் படையினர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். அந்த வாகனத்தில் விமானப்படை குறித்த தகவல்கள், புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. திரை வழியாக விமானத்தை இயக்குதல், செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகள், மாணவ, மாணவியரிடம் விளக்கினர். 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் கல்லுாரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் கண்காட்சியை கண்டு பயன் அடைந்தனர்.
இதுகுறித்து விமானப்படை அதிகாரிகள் கூறுகையில்,' விமானப்படையில் இளைஞர்கள் இணைவதை ஊக்குவிக்க, இக்கண்காட்சி வாகனம் இயக்கப்பட்டு வருகிறது,' என்றனர்.