/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறைந்த வட்டியில் கடன் தருவதாக ரூ.2 லட்சம் மோசடி செய்தோர் கைது
/
குறைந்த வட்டியில் கடன் தருவதாக ரூ.2 லட்சம் மோசடி செய்தோர் கைது
குறைந்த வட்டியில் கடன் தருவதாக ரூ.2 லட்சம் மோசடி செய்தோர் கைது
குறைந்த வட்டியில் கடன் தருவதாக ரூ.2 லட்சம் மோசடி செய்தோர் கைது
ADDED : ஜூன் 20, 2024 05:45 AM

கோவை, : குறைந்த வட்டியில் கடன் தருவதாக, தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.
அன்னுார் அருகே கோவில்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிபவர் ரவிக்குமார். கடந்த மே 17ம் தேதி கணபதியில் உள்ள நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி, வேலுாரை சேர்ந்த நரேஷ், 31, காங்கேயத்தை சேர்ந்த யுவராஜ், 36 ஆகிய இருவரும் இவரிடம் அறிமுகமாயினர்.
அவர்கள் இருவரும், குறைந்த வட்டியில் கடன் தருவதாக தெரிவித்ததை நம்பி, ரவிக்குமார் ரூ.20 லட்சம் கடன் கேட்டுள்ளார். கடன் தொகை பெற வேண்டுமெனில், ஒரு லட்சத்துக்கு ரூ.20 ஆயிரம் வீதம் ஆவணங்கள் தயார் செய்ய, கட்டணம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ரவிக்குமாரும் ரூ.2 லட்சம் வழங்குவதாக தெரிவித்துள்ளார். கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு வந்த இருவரிடமும், ரவிக்குமார் பணம் கொடுத்துள்ளார்.
விரைவில் கடன் தொகை தருவதாக, கூறிச்சென்ற அவர்களை, பின்னர் தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ரவிக்குமார், ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிந்து இருவரையும் தேடி வந்த போலீசார், காந்திபுரத்தில் அவர்கள் இருக்கும் தகவல் அறிந்து சென்று, கைது செய்து சிறையில் அடைத்தனர்.