/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கீர்த்திலால்ஸ் நிறுவனத்துக்கு சிறந்த பணியிடத்துக்கான விருது
/
கீர்த்திலால்ஸ் நிறுவனத்துக்கு சிறந்த பணியிடத்துக்கான விருது
கீர்த்திலால்ஸ் நிறுவனத்துக்கு சிறந்த பணியிடத்துக்கான விருது
கீர்த்திலால்ஸ் நிறுவனத்துக்கு சிறந்த பணியிடத்துக்கான விருது
ADDED : ஜூன் 26, 2024 01:37 AM

கோவை;ஆபரண தொழில் துறையில், புகழ்பெற்ற பிராண்டாக திகழும் கீர்த்திலால்ஸ் நிறுவனத்திற்கு, 'பெரிதும் விரும்பப்படும் பணியிடத்திற்கான' விருதை, டீம் மார்க்ஸ்மென் அமைப்பு வழங்கி கவுரவித்துள்ளது.
சிறப்பாக பணியாற்ற உகந்த பணிச்சூழலை உருவாக்குவதற்கு, அர்ப்பணிப்போடும், புத்தாக்கமான முறையிலும் மேம்பாடுகளை மேற்கொள்ளும், தொழில்நிறுவனங்களை அடையாளம் கண்டு, டீம் மார்க்ஸ்மென் அமைப்பு கவுரவிக்கிறது.
இதன்படி, 2024-25ம் ஆண்டுக்கான விருது, கீர்த்திலால்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. டில்லி ஹயாட் ரீஜென்ஸி ஹோட்டலில் நடந்த நிகழ்வில், முன்னாள் எம்.பி., ஜெயப்பிரதா மற்றும் டீம் மார்க்ஸ்மென் தலைமை செயல் அலுவலர் ராஜேஷ் குப்சந்தானி மற்றும் இணை நிறுவனர் சரத் குப்தா, கீர்த்திலால்சிற்கு வழங்கினர்.
கீர்த்திலால்ஸ் நிறுவனத்தின் சில்லறை விற்பனை மற்றும் இயக்க செயல்பாடுகள் துறையின், துணை தலைவர் முத்துக்குமார் பெற்றுக்கொண்டார்.