/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேங்கும் நீரால் டெங்கு அபாயம்! சுகாதாரத் துறை எச்சரிக்கை
/
தேங்கும் நீரால் டெங்கு அபாயம்! சுகாதாரத் துறை எச்சரிக்கை
தேங்கும் நீரால் டெங்கு அபாயம்! சுகாதாரத் துறை எச்சரிக்கை
தேங்கும் நீரால் டெங்கு அபாயம்! சுகாதாரத் துறை எச்சரிக்கை
ADDED : ஜூலை 11, 2024 11:48 PM
கோவை : கோவையில் டெங்கு பரவல் குறித்து பயப்பட தேவையில்லை என, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
பருவமழையின்போது தேங்கும் நீர் மற்றும் திறந்து வைக்கப்படும் சுத்தமான நீரில், 'ஏடிஸ்' இன கொசு உற்பத்தியாகி, டெங்கு காய்ச்சலை பரப்புகிறது.
தற்போது பருவமழை அவ்வப்போது பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. டெங்குவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கோவையில் தினமும் ஒன்று அல்லது இரண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. ஆனால், பயப்படும் அளவுக்கு பாதிப்பு இல்லை. டெங்கு தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக உள்ளனர். சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்து கொள்ளவும். தேங்கும் நீரை உடனடியாக அப்புறப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீரை காய்ச்சி குடிப்பது நல்லது,” என்றார்.