/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட கூடைப்பந்து போட்டி ராஜலட்சுமி மில்ஸ் சாம்பியன்
/
மாவட்ட கூடைப்பந்து போட்டி ராஜலட்சுமி மில்ஸ் சாம்பியன்
மாவட்ட கூடைப்பந்து போட்டி ராஜலட்சுமி மில்ஸ் சாம்பியன்
மாவட்ட கூடைப்பந்து போட்டி ராஜலட்சுமி மில்ஸ் சாம்பியன்
ADDED : ஜூன் 26, 2024 01:45 AM

கோவை;பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியின் இரு பிரிவுகளிலும், ராஜலட்சுமி மில்ஸ் (ஆர்.எல்.எம்.எச்.எஸ்.ஏ.,) அணி சாம்பியன் கோப்பையை வென்றது.
ராஜலட்சுமி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், பள்ளி மாணவ - மாணவியருக்கு '3ம் ஆண்டு ஸ்ரீ நவக்கோடி நினைவு கோப்பைக்கான' மாவட்ட கூடைப்பந்து போட்டி, நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் நடந்தது.
மாணவ - மாணவியருக்கு, 13 மற்றும் 16 வயதுக்கு உட்பட்டோர் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
நாக் அவுட் மற்றும் லீக் அடிப்படையில் நடந்த போட்டியில் மொத்தம், 52 அணிகள் பங்கேற்றன.
மாணவர் பிரிவு 13 வயதுக்குட்பட்டோருக்கான இறுதிப்போட்டியில் ராஜலட்சுமி மில்ஸ் கூடைப்பந்து பந்து கழக அணி, 73 - 32 என்ற புள்ளிக்கணக்கில் ஒய்.எம்.சி.ஏ., கூடைப்பந்து கழக அணியை வீழ்த்தியது.
16 வயதுக்கு உட்பட்டோருக்கான இறுதிப்போட்டியில், ராஜலட்சுமி மில்ஸ் கூடைப்பந்து கழக அணி 87 - 80 சபர்பன் பள்ளி அணியை வீழ்த்தியது.
மாணவியர் பிரிவில் 13 வயதுக்குட்பட்டோருக்கான இறுதிப்போட்டியில் எஸ்.வி.ஜி.வி., அணி 50 - 35 என்ற அல்வேர்னியா அணியை வீழ்த்தியது.
எஸ்.வி.ஜி.வி., அணியின் சுவாதிகா, மதிப்புமிக்க வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். 16 வயது பிரிவு இறுதிப்போட்டியில், கிருஷ்ணம்மாள் பள்ளி அணி 65 - 39 என்ற புள்ளிக்கணக்கில் அல்வேர்னியா அணியை வீழ்த்தியது.
இந்திய கூடைப்பந்து அணியின் முன்னாள் வீரர் ஜெயசங்கர் மேனன், தேசிய வீரர்கள் ராமமூர்த்தி, சரஸ்வதி, மல்லிகா, ரவிச்சந்திரன், ராஜலட்சுமி ஸ்போர்ட்ஸ் கிளப் துணை தலைவர் நல்ல சிவராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.