/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட கிரிக்கெட் லீக்; ஆறுமுகம் அணி வெற்றி
/
மாவட்ட கிரிக்கெட் லீக்; ஆறுமுகம் அணி வெற்றி
ADDED : ஜூலை 11, 2024 11:51 PM
கோவை : மாவட்ட அளவிலான இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில் ஆறுமுகம் லெவன் பேட்ரியாட்ஸ் அணி, 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'யூனிவர்சல் ஹீட் எக்சேஞ்ச் கோப்பைக்கான' இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி பீளமேடு பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானத்தில் நடந்தது.
இதில், ரெயின்போ 1972 எம்.எம்.சி.சி., மற்றும் ஆறுமுகம் லெவன் பேட்ரியாட்ஸ் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய ஆறுமுகம் அணி 50 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் சேர்த்தனர். அணிக்காக வெங்கடேஷ் (64*), வசந்த் குமார் (55), ஆருண் குமார் (54) ஆகியோர் சிறப்பாக விளையாடியனர். ரெயின்போ அணி சார்பில், பிரபு தேவா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார்.
வெற்றிக்கு 272 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய ரெயின்போ அணியின் பிரபு தேவா (45) மட்டும் போராடினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினர். இதனால், ரெயின்போ அணி 31.5 ஓவர்களில் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆறுமுகம் லெவன் பேட்ரியாட்ஸ் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.