/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பருப்பும், பாமாயிலும் இந்த மாசம் கிடைக்கும்'
/
'பருப்பும், பாமாயிலும் இந்த மாசம் கிடைக்கும்'
ADDED : ஜூன் 03, 2024 11:43 PM
பொள்ளாச்சி;'ரேஷன்கடைகளில் கடந்த மாதம் பருப்பு, பாமாயில் வாங்காதவர்கள், இந்த மாதம் சேர்ந்து வாங்கிக் கொள்ளலாம்,' என, மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் விதிமுறை காரணமாக, ரேஷனில் பொருட்கள் வழங்கப்படவில்லை. ஸ்டாக் இருந்த பொருட்களை மட்டுமே வழங்கினர். பெரும்பாலான கார்டுதாரர்களுக்கு பருப்பு, பாமாயில் வழங்கப்படவில்லை.
கடந்த மாதம் பருப்பு, பாமாயில் வாங்காத கார்டுதாரர்களுக்கு, இந்த மாதம் சேர்த்து வழங்க வேண்டும் என, ரேஷன் கார்டுதாரர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இந்நிலையில், கடந்த மாதம் பருப்பு பாமாயில் வாங்காதவர்கள், இந்த மாதம் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம் என, கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.