/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை விறுவிறு
/
ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை விறுவிறு
ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை விறுவிறு
ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை விறுவிறு
ADDED : ஜூன் 26, 2024 01:49 AM
கோவை;தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்(ஆர்.டி.இ.,) கீழ் எல்.கே.ஜி., வகுப்புகளில், 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இந்த இடங்களுக்கு, மாவட்ட வாரியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, குலுக்கல் முறையில் தேர்வு செய்து, விரும்பிய பள்ளிகளில் குழந்தைகளுக்கு இடம் வழங்கப்படுகிறது.
கோவையில் உள்ள, 324 தனியார் பள்ளிகளில், 3,850 எல்.கே.ஜி., இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 7,248 பேர்விண்ணப்பம் செய்துள்ளனர்.
குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இரண்டு லட்சம் ரூபாய்க்கு குறைவாக ஆண்டு வருமானம் உள்ளவர்கள், மாற்றுத்திறன் குழந்தைகள், துாய்மை பணியாளர்களின் குழந்தைகள் ஆகியோருக்கு, முன்னுரிமை வழங்கப்படுகிறது.