sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

/

விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்


ADDED : ஜூன் 30, 2024 02:11 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 02:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவை அருகே இருகூர் முதல் முத்துார் வரை, விளைநிலங்கள் வழியாக, பாரத் பெட்ரோலிய நிறுவனம் எண்ணெய் குழாய் பதிக்க, விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.

பாரத் பெட்ரோலியம் நிறுவனம், 30 ஆண்டுகளுக்கு முன் கோவை மாவட்டம் இருகூரில் இருந்து கரூர் வரை எண்ணெய் குழாயை விளைநிலங்கள் வழியாக பதித்து, செயல்படுத்தி வருகிறது. தற்போது புதிதாக, இருகூரில் இருந்து பெங்களூரு வரை, 340 கி.மீ., துாரம் வரை மீண்டும் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது.

இத்திட்டம், திருப்பூர் மாவட்டம் முத்துாரில் இருந்து பெங்களூரு வரை, 270 கி.மீ., வரை விவசாய நிலங்களுக்கு பாதிப்பின்றி, சாலையோரம் அமைக்கப்படுகிறது.

கெய்ல் திட்ட குழாய் பதிக்கும் திட்டம், சாலையோரம் செயல்படுத்தப்படுகிறது. கொச்சின் முதல் சேலம் வரையிலான இயற்கை எரிவாயு திட்ட குழாய், தமிழகத்தில் சாலையோரமாக அமைக்கப்பட இருக்கிறது.

இச்சூழலில், இருகூர் முதல் முத்துார் வரையிலான, 70 கி.மீ., துாரத்துக்கு விவசாய நிலத்தில் பழைய குழாய் அருகிலேயே, புதிய குழாய் பதிக்கும் திட்டத்தையும், ஏற்கனவே அமைத்த குழாயை அகற்றி சாலையோரம் அமைக்க வேண்டும் என கூறி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த விவசாயிகள், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர், கோவை கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

பின், கலெக்டர் தலைமையில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், ஒவ்வொரு விவசாயியும் தனித்தனியாக மனு கொடுத்தனர். ஒரே நேரத்தில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் முருகசாமி நிருபர்களிடம் கூறுகையில், ''எண்ணெய் நிறுவனங்கள், 30 ஆண்டுகளுக்கு முன் எங்களை மிரட்டி, விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதித்திருக்கின்றன. இனி எங்களை மிரட்ட முடியாது. எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, திட்டப்பணியை நிறுத்தி வைத்துள்ளோம்.

எண்ணெய் குழாய், எரிவாயு குழாய் ஆகியவை விவசாயிகளுக்கு பாதிப்பின்றி, சாலையோரம் மட்டுமே அமைக்க வேண்டுமென, தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்திருக்கிறது. தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தினரை அழைத்துப் பேசி, தீர்வு காண வேண்டும்,'' என்றார்.

'பேச்சுவார்த்தை நடத்தப்படும்'

கலெக்டர் கிராந்திகுமார் கூறுகையில், ''பாரத் பெட்ரோலிய நிறுவனம், எண்ணெய் குழாய் பதிப்பது குறித்து விவசாயிகளிடம் இருந்து மனுக்கள் வந்துள்ளன. பாரத் பெட்ரோலிய நிறுவனத்தினர் மற்றும் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, தெற்கு கோட்டாட்சியருக்கு அறிவுறுத்தியுள்ளேன்,'' என்றார்.








      Dinamalar
      Follow us