/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டதாரி ஆசிரியர்கள் பொதுக்குழு கூட்டம்
/
பட்டதாரி ஆசிரியர்கள் பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜூன் 16, 2024 01:23 AM

கோவை:கோவையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின், மாவட்ட பொதுக்குழு கூட்டம், திவ்யோதயா அரங்கில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு, மாவட்ட தலைவர் மகேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பகவதி அரிசி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
இந்த கூட்டத்தில் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பணிக் கொடை வழங்க வேண்டும், அரசாணை 243 அடிப்படையில் விரைவில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாறுதல் கலந்தாய்வு நடத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் 70க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.