/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகாதாரத் துறை சோதனை: இரு உணவகத்துக்கு 'சீல்' பழைய உணவுகள் பறிமுதல்
/
சுகாதாரத் துறை சோதனை: இரு உணவகத்துக்கு 'சீல்' பழைய உணவுகள் பறிமுதல்
சுகாதாரத் துறை சோதனை: இரு உணவகத்துக்கு 'சீல்' பழைய உணவுகள் பறிமுதல்
சுகாதாரத் துறை சோதனை: இரு உணவகத்துக்கு 'சீல்' பழைய உணவுகள் பறிமுதல்
ADDED : ஜூன் 16, 2024 01:37 AM
பாலக்காடு:பாலக்காடு, கொழிஞ்சாம்பாறையில் உள்ள உணவகங்களில், சுகாதார துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், பழைய உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொழிஞ்சாம்பாறை பகுதியில் உள்ள உணவகங்களில் சுகாதார துறை ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான அதிகாரிகள், சோதனை நடத்தினர்.
அப்பகுதியில் செயல்படும், மலபார் கிரீன், ராஜ சில்பி ஆகிய இரு உணவகங்களில் உள்ள சமையலறையில் மருத்துவ சான்றிதழ் இல்லாமல், வெளிமாநில தொழிலாளிகள் பணிபுரிவதும், பன்னீர், சிக்கன் போன்ற உணவு பொருட்கள் விதிமுறைகளை பின்பற்றாமல், ப்ரீசரில் வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும், மாசடைந்த பகுதியில் பரோட்டா மாவு, 'அல்பாம்' சிக்கன் போன்றவை வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தப் உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து, இரு உணவகங்களுக்கு அபராதம் விதித்து, பிரச்னைக்கு தீர்வு காணும் வரை உணவகங்களுக்கு 'சீல்' வைத்தனர்.
இதுகுறித்து, சுகாதார ஆய்வாளர் சுரேஷ் கூறுகையில், ''நீர் மற்றும் உணவு வாயிலாக, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவுகிறது. இந்நிலையில், உணவுப்பொருட்கள் குறித்த ஆய்வு தொடரும்.
விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பழைய மற்றும் கெட்டுப்போன உணவுப்பொருட்கள் பயன்படுத்தினால், உணவகத்துக்கு 'சீல்' வைக்கப்படும்,'' என்றார்.