/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்துஸ்தான் கல்லூரியில் தேசிய யோகா போட்டி தேர்வு
/
இந்துஸ்தான் கல்லூரியில் தேசிய யோகா போட்டி தேர்வு
ADDED : ஜூன் 23, 2024 12:05 AM
கோவை;உலக யோகா தினத்தை முன்னிட்டு, இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான யோகா போட்டிக்கான தேர்வு நடந்தது.
கல்லூரியின் உடற்கல்வித் துறை, ஓசோன் யோகா மையம், இன்டர்நேஷனல் யூத் யோகா பெடரேஷன் இணைந்து நடத்திய இப்போட்டியில், சுமார் 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஓசோன் யோகா மையத்தின் நிறுவனர் பாலகிருஷ்ணன், இன்டர்நேசனல் யூத் யோகா பெடரேஷனின் நிறுவனர் ஆறுமுகம் முன்னிலையில் போட்டிகள் நடைபெற்றன.
போட்டியில், 6 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்றனர். முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு, பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு வயது பிரிவிலும் முதலிடம் பிடித்தவர்கள் அந்தமானில் நடைபெறவுள்ள, தேசிய அளவிலான யோகா போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தஞ்சாவூர், வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியின் மாணவ, மாணவிகள் பெற்றனர். கோவை, போத்தனூர் ரயில்வே உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டாமிடம் பிடித்தனர்.இதில், கல்லூரியின் செயலாளர் சரஸ்வதி, இணைச் செயலாளர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.