ADDED : ஜூலை 11, 2024 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம் : பிரஸ்காலனி தம்பு மேல்நிலைப் பள்ளியில், இலக்கிய மன்ற தொடக்க விழா நடந்தது.
தமிழ் ஆசிரியர் விவேகானந்தன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் ரமேஷ் தலைமை வகித்தார். விழாவில், புலவர் ராமச்சந்திரன் பங்கேற்று, 'சுவை' என்ற தலைப்பில், சங்க இலக்கியங்கள், நீதி நூல்கள், அற இலக்கியங்களில் இருக்கக்கூடிய நல்ல கருத்துக்களையும், இலக்கணங்களையும், எளிதாக மாணவர்கள் கற்றுக்கொள்ளும் முறையையும் எடுத்து கூறினார். மாணவர்கள் வாழ்வில் முன்னேற ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, வாய்மை முதலியன குறித்து சிறுகதைகள், பாடல்கள் வாயிலாக எடுத்துக் கூறினார். தம்பு பள்ளியின் கல்வி இயக்குனர் குணசேகர், உதவி தலைமை ஆசிரியர் மாடசாமி உள்ளிட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.