/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊரக பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் துவக்கம்
/
ஊரக பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் துவக்கம்
ஊரக பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் துவக்கம்
ஊரக பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் துவக்கம்
ADDED : ஜூலை 11, 2024 11:23 PM
கருமத்தம்பட்டி : ஊரக பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நேற்று துவக்கி வைக்கப்பட்டது. முகாமில், 500 க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டன.
மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் நடந்த 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் ஊரக பகுதிகளிலும் துவங்கி உள்ளது. கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கணியூர் ஊராட்சியில், கலெக்டர் கிராந்தி குமார் முகாமை துவக்கி வைத்தார். எம்.பி., ராஜ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வீட்டு மற்றும் நகர்புற வசதித்துறை அமைச்சர் முத்துசாமி முகாமில் ஆய்வு செய்தார். மாவட்ட செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
15 அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். 500க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
பயனாளிகளுக்கு உத்தரவுகளை வழங்கியபின், கலெக்டர் கிராந்தி குமார் கூறுகையில்,' இத்திட்டத்தின் கீழ் வரும், 14 ம்தேதி முதல், செப்., 14 ம்தேதி வரை, 218 ஊராட்சி மக்கள் பயன்பெறும் வகையில், 62 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
15 துறை அலுவலர்கள் மூலம் மனுக்கள் பெறப்படும். 30 நாட்களுக்குள் மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 700 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட, 20 முதல் 25 ஆண்டுகள் ஆன பழைய வீடுகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில், 83 குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வண்டல் மண் எடுக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு தாலுகா அலுவலகங்களில் பயிற்சி அளிக்கப்படும்,' என்றார்.