/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கெத்தை மின் நிலையத்தில் உச்சமின் தேவை அதிகரிப்பு
/
கெத்தை மின் நிலையத்தில் உச்சமின் தேவை அதிகரிப்பு
ADDED : ஜூன் 24, 2024 01:04 AM
ஊட்டி:குந்தா மின் வட்டத்துக்கு உட்பட்ட கெத்தை மின் நிலையத்தில் உச்ச மின் தேவை, 300 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குந்தா மின் வட்டத்திற்கு உட்பட்ட குந்தா அணை, 89 அடி கொண்டதாகும். இங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீர் ராட்சத குழாய் மூலம் கெத்தை மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.
கெத்தை மின் நிலையத்தில், 5 பிரிவுகளில், 175 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளும் திறன் உள்ளது. இந்த மின் நிலையம், காலை, 6:00 மணியிலிருந்து 9:00 மணி வரை மற்றும் மாலை, 6:00 மணியிலிருந்து, 9:00 மணி வரை உச்ச மின் தேவையை பூர்த்தி செய்கிறது. நாள்தோறும், காலை மற்றும் மாலையில் உச்சமின் தேவை, 200 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த இரு வாரமாக கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மின் தேவை அதிகரிப்பால், கெத்தை மின் நிலையத்தில் உச்சமின் தேவை, கடந்த சில நாட்களாக, 300 மெகவாட்டாக அதிகரித்து உள்ளது.